Posts

Showing posts with the label History

இந்தியாவின் கதை : அக்பர்

                                                                 தான் செய்த அனைத்து தவறுகளையும் மாமன்னர் அக்பரை இந்த உலகிற்கு பெற்றுத் தந்ததன் காரணமாகச் சரி செய்துவிட்டார் ஹூமாயூன் என்றால், அது மிகையல்ல. இறந்த பிறகு மூன்று நாட்களுக்கு அந்த செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் இளவரசர் அக்பர் தொலைதூரத்தில் பஞ்சாப் பிரதேசத்தில் போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல் காரர்கள் ஆவதும், முதுகில் குத்துபவர்கள் எல்லாம் மாமன்னர்கள் ஆவதும் அக்காலத்தில் மிக சாதாரணமாக இருந்ததால் தனயனுக்குத் தகவல் சொல்லி தயார்படுத்தும் நிலைமை வரும் வரை இதை மிக ரகசியமாக வைத்தனர். ஹூமாயூன்  போல தோற்றமளித்த ஒருவருக்கு அரச உடை அணிவித்து உப்பரிகையில் மங்கலான வெளிச்சத்தில் அமரவைத்து மக்களுக்கு கையசைக்க வைத்து மாமன்னர்  ஹூமாயூன் உயிரோடு இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்தனர்.  ஷெர்ஷாவின் வழிவந்த சிக்கந்தர்ஷா ஹூமாயூனோடு போராடி தோற்ற பிறகு, பஞ்சாபில் தஞ்சம் புகுந்து மறுபடியும் படைதிரட்டி போருக்கு வந்ததால் இளவரசர் அக்பர் மற்றும் தளபதி பைராம் கான் ஆகியோரின் தலைமையில் படை

இந்தியாவின் கதை: பாபர்

Image
                                                          ஐரோப்பாவையும் ஆசியாவையும் நடுங்க வைத்த துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையும் மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் பரம்பரையும் இணைந்ததில் பிறந்தவர்தான் பாபர். பொதுவாக துருக்கியர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள் கல்வியறிவும், புத்திசாலித்தனமும்,ராஜதந்திரமும் அமையப் பெற்றவர்கள். ஆனால்    மங்கோலியர்கள் யாருக்கும் அஞ்சாத ஆவேசமான போர் வீரர்கள். இந்த இரு இனங்களின் ரத்தமும் கொண்டவர்தான் பாபர். அதனால் தான் அவரால் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சோதனை எல்லாம் கடந்து பிற்பாடு இந்தியாவில் ஒரு தீர்க்கமான சாம்ராஜ்யம் அமைத்து உலகப் புகழ் பெற முடிந்தது. கி.பி.  1483 இல் பர்கானா எனும் சிறு ராஜ்யத்தின் மன்னரான உமர் சேக்- க்கு மகனாகப் பிறந்தார். பாபருக்கு 11 வயது நடக்கும் பொழுது அவர் தந்தை இறந்துவிட்டதால் ஆட்சிப் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். மாமன்னர் தைமூர் ஆண்டுவந்த நிலப்பரப்பு அவரது மறைவுக்குப்பின் பல பகுதிகளாக சிதறி பிரிந்து போனது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மன்னர் ஆண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் தைமூரின் பரம்பரையில் வந்தவர்கள்தான். பர்கானா ஆட்சிப்பொறுப்ப

இந்தியாவின் கதை : ஹூமாயூன்

                           பாபர் என்ற புலி எட்டு அடி பாயும் போது, ஹூமாயூன் என்ற குட்டி பதினாறு அடி பாயும் என்றே எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த குட்டி ஒரு அடி தாண்டுவதற்குள்ளேயே தடுக்கி விழுந்தது. மொகலாய சாம்ராஜ்யத்தின் மிகவும் பரிதாபமான மன்னராக வரலாறு காண்பிப்பது இவரைத்தான். பாபர் விட்டுச்சென்ற அஸ்திவாரத்தின் மீது கோட்டை எழுப்ப தெரியாமல் தடுமாறினார். ஹூமாயூன் வீரம் மிக்கவர் தான், திறமையானவர் தான். இருப்பினும் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வதற்கு அதைத் தவிர பல்வேறு திறமைகள் வேண்டும். அதுதான் இல்லாமல் போனது. விஷ பாம்புகளுக்கும் பால் வார்க்கும் இரக்க குணம் கொண்டவர். ஒரு பிரச்சனை முடிவுக்கு வரும் வேளையில் அதை விட்டுவிட்டு, "வெற்றி" என்ற வார்த்தை காதில் கேட்ட உடனேயே கொண்டாட ஆரம்பித்து விடுவார். கூடவே மூடநம்பிக்கையும் தொற்றிக்கொண்டது. நாள், கிழமைக்கு ஏற்றவாறு உடை அணிவது, உணவு உண்பது, இதைத்தாண்டி ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆஸ்தான மண்டபம் கட்டி அந்தந்த நாளில் அந்த மண்டபத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.                             ஹூமாயூன் தன் வாழ்நாளில் மூன்று திசைகளிலிருந்து மி

இந்தியாவின் கதை : பல காமெடியன்களும் தைமூர் என்ற அரக்கனும்

                                                   கி.பி. 1388 செப்டம்பர் 20 அன்று சுல்தான் பிரோஸ் துக்ளக் இறந்த பிறகு அரியணை ஏறியவர்களின் பெயர்கள் மக்கள் மத்தியில் பரவுவதற்கு முன் அவர்கள் காணாமல் போயினர்.  அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் என்ற ஒரு தகுதியை தவிர,  நாட்டை ஆள்வதற்கு என தகுதிகள் ஏதும் இல்லை. சுல்தான்  பிரோஸ் துக்ளக்  இறந்த பிறகு டெல்லி சுல்தான்களின்  ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்தது. சுல்தான் மறைவுக்குப் பிறகு அவரது பேரன்  துக்ளக் ஷா  அரியணையில் அமர்ந்தார். அரண்மனையை ஒரு ஜாலியான “கிளப்” போல நடத்தி, ஐந்தே மாதங்களில் அமைச்சர்களால் பரலோகம் அனுப்பப்பட்டார். பிறகு இன்னொரு  பேரன் அபூபக்கருக்கு அமைச்சர்கள் மணி மகுடம் சூட்டினார். தன் ஆண்டுவிழாவை கூட காணாத அபூபக்கர் தன் சொந்த   மாமாவான  முகமதுவிடம் அரியணையை பறிகொடுத்தார். நான்கு ஆண்டுகள் ஆட்சி என்ற பெயரில் மக்களை வெறுப்பேற்றி, பிறகு தன் மகனான மகமது ஷா என்பவரை ஆட்சியில் அமர்த்தினார்.  இவர் சட்டையை பிடித்து நான்தான் டெல்லி சுல்தான் என மல்லு கட்டினார் இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்  நஸ்ரத் ஷா.  இவர்கள் இருவரும் தாங்கள் தான் டெல்லி சுல்தான் என

இந்தியாவின் கதை : லோடி சாம்ராஜ்யம்

                                                 டெல்லியில்  இரத்த ஆறு ஓட விட்டு, தைமூர் இந்தியாவை விட்டு சென்ற பிறகு டெல்லியில் நடமாடுவதற்கு கூட ஆள் இல்லை. எங்கு பார்த்தாலும் பிணங்களும் மரண ஓலமும் இருந்தன. அதன் பிறகு போட்டி மன்னர்களின் ஒருவரான மகமது ஷா தலை மறைவிலிருந்து வெளிவந்து டெல்லி வீதிகளை பெயரளவுக்கு சுத்தம் செய்துவிட்டு ஆட்சி என்ற பெயரில் ஏதோ சில ஆண்டுகள் சமாளித்தார்.  கி.பி.1412 -இல் அவர் இறந்த பிறகு துக்ளக் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.  அதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு சுல்தான் இல்லாமல்  தவுலத் கான் லோடி என்ற பிரபுவின் நிர்வாகத்தின் கீழ் டெல்லி இருந்தது.  தைமூர் இந்தியா வந்தபோது  அவருக்கு வெள்ளைக்கொடி காட்டி சேர்ந்து கொண்ட சிலரை சில மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமித்திருந்தார். அவ்வாறு முல்தான் மற்றும் லாகூருக்கு ஆளுநராக  நியமிக்கப்பட்டிருந்தவர் தான் கிஜிர்கான். கிபி 1414 இல் லாகூரில் இருந்து ஒரு சிறிய  படையுடன் வந்து டெல்லியை கைப்பற்றி  சுல்தானாக அமர்ந்தார்.   இவரும் இவரது வாரிசுகளும் டெல்லியை 37 ஆண்டுகள் ஆட்சி  செய்தனர்.  இந்த காலகட்டத்தில் டெல்லியின்  எல்லை மிகவும் சுரு

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

 உழைப்பு மட்டும் இருந்தால் அடிமையும் அரசன் ஆகலாம் என நிரூபித்தவர் தான் குத்புதீன் அய்பக். கடைத்தெரு ஒன்றில் அடிமையாக ஏலத்திற்கு வந்த குத்புதீனை முதலில் ஒரு ஆப்கான் வியாபாரி வாங்கினார். பலமுறை லாபத்திற்கு கைமாறிய அந்த அடிமை இறுதியாக ஒரு வியாபாரியிடம் கை மாறினான். கோட்டையில் சுல்தான் முகமது கோரிக்கு அடிமைகள் தேவை என்பதை அறிந்த அந்த வியாபாரி, குத்புதீனை அழைத்துச் சென்றார். குத்புதீனைப் பார்த்தவுடன் சுல்தானுக்குப் பிடித்துப் போனதால் வியாபாரிக்கு மிகவும் லாபம். அரண்மனையில் அடிமையாக தன் பணியைத் தொடங்கிய அய்பக், மிக விரைவில் சுல்தானின் முழு நம்பிக்கையைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து குதிரைப் படையில் ஒரு தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். டெல்லி மன்னன் பிருத்விராஜுடன்  நடந்த போரில் ஒரு தளபதியாக காட்டிய வீரம் சுல்தானை மிகவும் கவர்ந்தது. பிறகு குஜராத், பீகார் ,வங்காளப் பகுதிகளை வென்று சுல்தானின் காலடியில் சமர்ப்பித்தான் அய்பக். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுல்தான் டெல்லி பிரதிநிதியாக குத்புதீன் அய்பக்கை நியமித்து ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதைத் தொடர்ந்தும் அமைதியாக உட்காரவில்லை. இந்தியாவில் முதன்மு

இந்தியாவின் கதை : அத்தியாயம் 7- முகமது கோரி

Image
 கி. பி. 1149 ஆம் ஆண்டில் இன்றைய ஆப்கானிஸ்தானின் கோரி எனும் இராஜ்ஜியத்தில் பிறந்த ஒரு குழந்தை தான்,  தெற்காசியாவில் முஸ்லீம்களின் இராஜ்ஜியம் அமைய காரணமாக அமையப் போகிறது என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த குழந்தையின் பெயரே,  "முகமது கோரி".  இன்றைய ஆப்கானிஸ்தானின், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிிஸ்தான், துர்க்மேனிஸ்தான் போன்ற  நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தார். ஆனால் அந்த இடத்திற்கு அவர் சுலபமாக வர வில்லை. 1173 இல் கஜினி முகமது வின் சொந்த நகரான கஜினியைக் கைப்பற்றி அரச வம்சத்தைக் கூண்டோடு அழித்தார்.  1175 இல் முல்தான் பிரதேசத்தைக் கைப்பற்றித் தன் அரசோடு இணைத்துக் கொண்டார். 1176 இல் குஜராத்தைத் தாக்கி,  அதன் அரசி நாயகி தேவியிடம் தோற்று ஓடினார்.   இதே காலகட்டத்தில் டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருப்பது,  சௌகான் இனத்தின் கடைசி மன்னர் பிருத்விராஜ் சௌகான். இவருக்கு வரலாற்றில் பலச் சிறப்புகள் உண்டு. அதில் அவருடையக் காதல் திருமணம் முக்கியமானது. பிருத்விராஜ் ஜூம்,  கன்னோசி நாட்டு மன்னன் ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தையும் மையல் கொண்டிருந்தனர். இதை அறிந்த ஜெயச்சந்திரன்,  உடனே சம