இந்தியாவின் கதை : முடிவுரை
இந்தியாவை பந்தாடி விட்டு திரும்பி சென்ற நாதிர்ஷா எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு பாரசீக கொலையாளியின் தனிப்பட்ட குருவாளுக்கு பலியானார். அவர் விட்டு விட்டுப் போன அகமது ஷா அப்தாலி எனும் வீரர் 16 அடி பாய்ந்தார். நாதிர் ஷாவின் பிரதான தளபதிகளுள் ஒருவர் இந்த அகமது ஷா. எஜமானின் மறைவுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் காபுல் கந்தகார் உள்ளிட்ட பகுதிகளை வென்று ஆட்சி அமைத்தார் இந்த வீரர். ஏற்கனவே நாதிர்ஷாவுடன் டெல்லிக்கு வந்து குஷி கண்ட இந்த புலி தன் பங்குக்கு இந்திய மண் மீது குறி வைத்தது. 1748 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1761 வரை ஐந்து முறை இந்தியாவுக்கு படையெடுத்தார் ஆப்தாலி. 1748 இல் 12 ஆயிரம் வீரர்கள் அடங்கிய படையுடன் இந்தியாவில் நுழைந்த அவரை முகலாய பாதுஷா முகமது ஷாவின் வாரிசான அகமதுஷா படையெடுத்து அவரை சமாளித்து விரட்டி அடித்தார். 1750 இல் மறுபடியும் இந்திய எல்லைக்குள் நுழைந்த அப்தாலி, பஞ்சாப் பிரதேசத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார். அவரது அடுத்த படை எடுப்பில் காஷ்மீர் ஆப்கானியர் வசம் வீழ்ந்தது. முகமது ஷா இறந்த பிறகு தன் 22 ஆவது வயதில் அரியணை ஏறிய அகமதுஷ