Posts

Showing posts from March, 2021

இந்தியாவின் கதை : அத்தியாயம் 6 - முகமது கஜினி

Image
 இன்று பள்ளித் தேர்வில் முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் வரை, அனைவருக்கும் ஊக்கமாகச் சொல்லப்படுவது, முகமது கஜினியின் கதை. தோல்வி அடைந்தும் 17 முறை விடாமல் இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்பது கதை. உண்மையில் அவன் தோல்வி அடைந்ததால் மறுபடியும் இந்தியா மீதுப் படையெடுத்து வரவில்லை. இந்தியாவைக் கொள்ளை அடிக்கவே அத்தனை முறையும் படையெடுத்து வந்தான். ஆதலால்,  அநேகமாக அவனதுப் பதினேழு படையெடுப்புகளுமே வெற்றிதான். ஆப்கானிஸ்தானில் காபூலுக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. கி.பி. 977-ல் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பிரபு கஜினியைத் தலைநகராக்கி ஆட்சி புரிந்தார். அவருடைய மகன்தான் முகமது கஜினி. கி.பி.998-ல் தந்தை இறந்த பிறகு, அரியணையில் அமர்ந்தபோது அவனுக்கு வயது இருபத்தேழு.  இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தப் புதிய நூற்றாண்டுத் தங்களைப் பொறுத்தவரைப் பெரும்  தலைவலியோடு ஆரம்பிக்கப் போகிறது என்பதை வட இந்திய அரசர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கி. பி. 1000-ல்  ஆரம்பித்தது, இந்தியாவை நோக்கிக் கஜினியின் முதல் படையெடுப்பு.  ஏன் அப்போது எல்லோருக்குமே முதல் இலக்கு இந்தியா? காரணம் உண்

இந்தியாவின் கதை- அத்தியாயம் 5 : டெல்லியும் இராஜபுத்திரர்களும்

 டெல்லி....!! இந்தியாவின் நெற்றிப் பகுதியை வசீகரமாக அலங்கரிக்கும் இந்த மங்கலப் பொட்டை அழிக்கப் பார்த்த வேற்று நாட்டவர்கள் தான் எத்தனை பேர்? அதற்காக எத்தனை எத்தனை முயற்சிகள்??!  உலக சரித்திரத்தில் எத்தனையோ நகரங்கள் சுவடு இல்லாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கிறது. ஆனால் டெல்லியின் கதை வேறு. எந்த சக்தியாலும் இந்த நகரத்தை வீழ்த்த முடியவில்லை, வரலாற்றுப் பக்கங்களில் இருந்தும் முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்பெற்று சிலிர்த்து எழுந்து நின்றது டெல்லி. ஆனால் கம்பீரமான இந்த மாநகரம் வரலாற்றுப் போக்கில் வாங்கிய கத்திக்குத்துகளும், தாங்கிய சோதனைகளும் நம்மை திகைக்க வைக்கின்றன. இந்தியாவில் புராதான கதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெல்லியின் கதையும் அதே புராதான கதைகளில் இருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பாகப்பிரிவினை செய்யும் பொழுது பாண்டவர்களுக்கு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த "காண்டவ பிரஸ்தம்" என்ற பொட்டல் காட்டைக் கொடுத்தார்கள். அதை அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் துணையோடு "இந்திரப்பிரஸ்தம்&quo