தானத்தின் மகத்துவம்
"தானம்" என்ற வார்த்தைக்கு பல இலக்கணம் இருக்கிறது. ஆனால் நான் மகாபாரதத்தை வைத்து எடுத்துக்காட்டாக கூறுகிறேன். தானம் செய்வதில் தர்மர் வல்லவராயினும், அனைவரும் கர்ணனின் புகழையே பெறுமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டார். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் சென்றனர். முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர். தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப் பட்டு விட்டன, மழை பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார். அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர். செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி