Posts

Showing posts from January, 2022

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

 உழைப்பு மட்டும் இருந்தால் அடிமையும் அரசன் ஆகலாம் என நிரூபித்தவர் தான் குத்புதீன் அய்பக். கடைத்தெரு ஒன்றில் அடிமையாக ஏலத்திற்கு வந்த குத்புதீனை முதலில் ஒரு ஆப்கான் வியாபாரி வாங்கினார். பலமுறை லாபத்திற்கு கைமாறிய அந்த அடிமை இறுதியாக ஒரு வியாபாரியிடம் கை மாறினான். கோட்டையில் சுல்தான் முகமது கோரிக்கு அடிமைகள் தேவை என்பதை அறிந்த அந்த வியாபாரி, குத்புதீனை அழைத்துச் சென்றார். குத்புதீனைப் பார்த்தவுடன் சுல்தானுக்குப் பிடித்துப் போனதால் வியாபாரிக்கு மிகவும் லாபம். அரண்மனையில் அடிமையாக தன் பணியைத் தொடங்கிய அய்பக், மிக விரைவில் சுல்தானின் முழு நம்பிக்கையைப் பெற்றுப் படிப்படியாக உயர்ந்து குதிரைப் படையில் ஒரு தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். டெல்லி மன்னன் பிருத்விராஜுடன்  நடந்த போரில் ஒரு தளபதியாக காட்டிய வீரம் சுல்தானை மிகவும் கவர்ந்தது. பிறகு குஜராத், பீகார் ,வங்காளப் பகுதிகளை வென்று சுல்தானின் காலடியில் சமர்ப்பித்தான் அய்பக். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுல்தான் டெல்லி பிரதிநிதியாக குத்புதீன் அய்பக்கை நியமித்து ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதைத் தொடர்ந்தும் அமைதியாக உட்காரவில்லை. இந்தியாவில் முதன்மு