Posts

Showing posts with the label History

இந்தியாவின் கதை : அத்தியாயம் 6 - முகமது கஜினி

Image
 இன்று பள்ளித் தேர்வில் முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் வரை, அனைவருக்கும் ஊக்கமாகச் சொல்லப்படுவது, முகமது கஜினியின் கதை. தோல்வி அடைந்தும் 17 முறை விடாமல் இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்பது கதை. உண்மையில் அவன் தோல்வி அடைந்ததால் மறுபடியும் இந்தியா மீதுப் படையெடுத்து வரவில்லை. இந்தியாவைக் கொள்ளை அடிக்கவே அத்தனை முறையும் படையெடுத்து வந்தான். ஆதலால்,  அநேகமாக அவனதுப் பதினேழு படையெடுப்புகளுமே வெற்றிதான். ஆப்கானிஸ்தானில் காபூலுக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. கி.பி. 977-ல் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பிரபு கஜினியைத் தலைநகராக்கி ஆட்சி புரிந்தார். அவருடைய மகன்தான் முகமது கஜினி. கி.பி.998-ல் தந்தை இறந்த பிறகு, அரியணையில் அமர்ந்தபோது அவனுக்கு வயது இருபத்தேழு.  இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தப் புதிய நூற்றாண்டுத் தங்களைப் பொறுத்தவரைப் பெரும்  தலைவலியோடு ஆரம்பிக்கப் போகிறது என்பதை வட இந்திய அரசர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கி. பி. 1000-ல்  ஆரம்பித்தது, இந்தியாவை நோக்கிக் கஜினியின் முதல் படையெடுப்பு.  ஏன் அப்போது எல்லோருக்குமே முதல் இலக்கு இந்தியா? காரணம் உண்

இந்தியாவின் கதை- அத்தியாயம் 5 : டெல்லியும் இராஜபுத்திரர்களும்

 டெல்லி....!! இந்தியாவின் நெற்றிப் பகுதியை வசீகரமாக அலங்கரிக்கும் இந்த மங்கலப் பொட்டை அழிக்கப் பார்த்த வேற்று நாட்டவர்கள் தான் எத்தனை பேர்? அதற்காக எத்தனை எத்தனை முயற்சிகள்??!  உலக சரித்திரத்தில் எத்தனையோ நகரங்கள் சுவடு இல்லாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கிறது. ஆனால் டெல்லியின் கதை வேறு. எந்த சக்தியாலும் இந்த நகரத்தை வீழ்த்த முடியவில்லை, வரலாற்றுப் பக்கங்களில் இருந்தும் முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்பெற்று சிலிர்த்து எழுந்து நின்றது டெல்லி. ஆனால் கம்பீரமான இந்த மாநகரம் வரலாற்றுப் போக்கில் வாங்கிய கத்திக்குத்துகளும், தாங்கிய சோதனைகளும் நம்மை திகைக்க வைக்கின்றன. இந்தியாவில் புராதான கதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெல்லியின் கதையும் அதே புராதான கதைகளில் இருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பாகப்பிரிவினை செய்யும் பொழுது பாண்டவர்களுக்கு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த "காண்டவ பிரஸ்தம்" என்ற பொட்டல் காட்டைக் கொடுத்தார்கள். அதை அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் துணையோடு "இந்திரப்பிரஸ்தம்&quo

இந்தியாவின் கதை - அத்தியாயம் 4. அலெக்சாண்டரின் தோல்வி

                                ஒரு திருமண விழாவில் தன் சொந்த காவலர்களாலேயே கிரேக்கத்தின் மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப் கொலை செய்யப் படுகிறார். 20 வயதே ஆன அலெக்சாண்டர் அரசராக முடி சூடினார். இதனை அறிந்த மற்ற நாடுகள் இனி மாசிடோனியா ராஜ்ஜியத்திற்கு கப்பம் கட்ட முடியாது என கலகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். ஏத்தென்ஸ் அதில் குறிப்பிடத் தகுந்தது. ஒரு 20 வயது சின்னப் பையன் தானே என்று அவர்கள் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர். ஆனால் இது தான் அலெக்சாண்டரை கோபங் கொள்ள வைத்தது. தன் படைகளை திரட்டி கொண்டு சென்றார். அனைவரையும் தன் வீரத்தால் மீண்டும் கட்டுக்குள் வைத்தார். கிரேக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளையும் பிடித்தார். அடுத்தாக தன் தந்தையின் கனவான பாரசீகத்தை நோக்கி சென்றார். 70,000 பேர் கொண்ட தன் படையில் சுமார் 35,000 பேரை கிரேக்கத்தில் விட்டுச் சென்றார். தன் நாட்டை பிறர் தாக்கினால் பாதுகாக்க இந்த படை இருந்தது.                                   மீதமுள்ள 35,000 பேர் கொண்ட ஒரு படை பாரசீகத்தை நோக்கி சென்றது. தன் தந்தையின் கனவிற்காக பாரசீகத்தின் டேரியஸ் மன்னனை போரில் வென்றார். கிரேக்கம், பாரசீகத்தை

இந்தியாவின் கதை- அத்தியாயம் 3. பாரசீகப் படையெடுப்பு

                 பாரசீகர்கள் இந்தியாவின் தில்லியை ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் பெரும் பகுதியை கூட ஆளவில்லை என்றாலும், இந்தியாவின் வரலாற்றில் இருந்து பாரசீகர்களை முழுவதுமாக நீக்க என்னால் முடியவில்லை. ஏனெனில், இந்திய மண்ணில் நாடு பிடிக்கும் வேட்கையுடன் கால் பதித்த முதல் அயல் நாட்டு சாம்ராஜ்யம் இது. முதலில் வந்தது அலெக்சாண்டர் என சிலர் கருதுவதுண்டு. ஆனால் அலெக்சாண்டர் பின்னாளில் இந்தியா வர காரணமே, பாரசீகர்கள் தான்.                  பாரசீகத்தில் சைரஸ் (Cyrus) என்ற மன்னர் படை பலத்தால் தனது அரசை சாம்ராஜ்யமாக மாற்றுகிறார். இவரது ஆட்சி கி. மு. 559 முதல் கி. மு. 530 வரை இருந்தது. தனது சாம்ராஜ்யத்திற்கு அக்கிமேனியன்           (Achimeninan Empire) பேரரசு என பெயர் சூட்டுகிறார். இந்த பேரரசின் மாபெரும் படை,  அதன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. மேற்கில் கிரேக்கம் வரையிலும்,  கிழக்கில் காந்தாரம் (இன்றைய வட பாகிஸ்தான்), சிந்து நதி வரை அதன் எல்லை பரந்து விரிந்தது.                    சைரஸ் இறந்த பிறகு அவரது மகன் கேம்பைசஸ் (Cambyses)  ஆட்சிக்கு வருகிறார். இவருக்கு இந்தியா மேல் கவனம் செலுத்

இந்தியாவின் கதை- அத்தியாயம் 2. நிலங்கள்

                        "நிலமே எங்கள் உரிமை" என காலா திரைப்படத்தில் வசனம் பேசி அனைவரையும் போராட்டத்திற்கு அழைப்பார், நம் கதாநாயகன். நிலம் மனித இனத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என இந்த அத்தியாயத்தில் தெரிந்துக் கொள்வீர்கள். நம் முதலாம் அத்தியாயத்தில் குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி பார்த்தோம். அதில் பலர் இறந்தனர். இன்னும் பலர் கிடைத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். ஆதி காலத்தில் வேட்டையாடி சாப்பிடுவதும், இனப்பெருக்கமுமே மனிதனின் கடமையாக இருந்தன. மிருகங்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனிதன் மலைகளிலும், மலைக் குகைகளிலும் வாழ ஆரம்பித்தான். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என அழைக்கப்பட்டது. இங்கு முக்கிய உணவாக மலைத்தேன், கிழங்கு வகைகள் இருந்தன. அவ்வபோது வேட்டையாடியும் வந்தனர். இந்தக் காலக்கட்டத்திலேயே மனிதன் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டான்.                            குறிஞ்சி நில "கடவுள்" முருகன் என நாம் அனைவரும் பள்ளியில் படித்திருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் குறிஞ்சி நில "தலைவன்". மலைகளை ஏறுவதால் அந்த தலைவனி

இந்தியாவின் கதை- அத்தியாயம் 1.மனித இனம்

Image
                          நாம் அனைவரும் பள்ளியிலேயே, வரலாறு படிப்பதற்கு முன் அறிவியிலைப் படித்ததால், இன்றும் அறிவியலோடுத் தொடங்குவோம். 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் - அண்டம் உருவாகிறது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் - சூரியக்குடும்பம் உருவாகிறது.  380 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஒரு செல் உயிரினம் உருவாகிறது.  16 கோடி ஆண்டுகளுக்கு முன் - குட்டி போட்டு பாலூட்டும் இனம் உருவாகிறது.               இத்தனை ஆண்டுகளில்,  உலகம் அழிவையும் சந்தித்தே வந்தது. கடல்கள் மூலமாகவும், விண்கற்கள் விழுந்ததன் காரணமாகவும் தட்ப வெப்ப நிலை மாறியது. அதனால் சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்தது. அதில் டைனோசர்கள் முக்கியமானவை. ஆனால் அதே தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் வேறு சில உயிரினங்களில் மரபனு மாற்றம் ஏற்பட்டு வேறு சில உயிரினங்கள் தோன்றின.                                இன்று மனிதனின் மூதாதையர்கள் யார் என்றால், குரங்கு என்போம். ஆனால் உன்மை அதுவல்ல.                           Hominoidea என்ற உயிரினம் தான் அனைவருக்கும் மூத்தவர். மனிதனர்கள் "Homo" என்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். குரங்குகளில் ஒவ்வ

இந்தியாவின் கதை - முகவுரை

 "தன் வரலாற்றை மறந்த இனத்தை,  அந்த வரலாறும் நினைவு கொள்ளாது." இந்தியாவையும், அதன் மக்களையும் பற்றி பல வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அதன் உண்மையான கதையை தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.         "பழமையைப் பற்றித் தெரியாதவர்களால் புதுமையைப் படைக்க இயலாது" இந்தியா என சொன்னதும், இன்று இருக்கும் நாட்டை நினைக்க வேண்டாம். இது வெறும் 73 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஒரு குழந்தை. என்னுடைய கதை இந்த நிலப்பரப்பை பற்றியது. ஆங்கிலேயர்கள், பிரன்சுக்காரர்கள், டட்ச்சுக்காரர்கள் பல குறு மன்னர்கள், மொகலாயர்கள், அரேபியர்கள், நெப்போலியன்,  தைமூர், ஏன்??  மனித இனத்தின் முதல் மனிதனை கண்ட மாபெறும் வரலாறு கொண்ட நிலம் இது. இதை ஒரு பதிவில் சொல்ல முடியாததால் ஒரு தொடராக எழுத உள்ளேன். சில வரலாறை சுருக்கமாகவும், சில வரலாறை விரிவாகவும் எழுத இருக்கிறேன்.  யாரேனும் குறிப்பாக ஒரு நிகழ்வை பற்றி கேட்டால்,  அதற்காக ஒரு தனி பதிவும் எழுதவுள்ளேன். பல கோடி ஆண்டுகள் என்னுடன் பயணிக்கத் தயாரா?? இல்லையா? சரி, வரும் வெள்ளிக்கிழமை அன்று மாலைக்குள் தயாராகுங்கள். அன்று "இந