இந்தியாவின் கதை- அத்தியாயம் 2. நிலங்கள்
"நிலமே எங்கள் உரிமை" என காலா திரைப்படத்தில் வசனம் பேசி அனைவரையும் போராட்டத்திற்கு அழைப்பார், நம் கதாநாயகன். நிலம் மனித இனத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என இந்த அத்தியாயத்தில் தெரிந்துக் கொள்வீர்கள். நம் முதலாம் அத்தியாயத்தில் குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி பார்த்தோம். அதில் பலர் இறந்தனர். இன்னும் பலர் கிடைத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். ஆதி காலத்தில் வேட்டையாடி சாப்பிடுவதும், இனப்பெருக்கமுமே மனிதனின் கடமையாக இருந்தன. மிருகங்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனிதன் மலைகளிலும், மலைக் குகைகளிலும் வாழ ஆரம்பித்தான். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என அழைக்கப்பட்டது. இங்கு முக்கிய உணவாக மலைத்தேன், கிழங்கு வகைகள் இருந்தன. அவ்வபோது வேட்டையாடியும் வந்தனர். இந்தக் காலக்கட்டத்திலேயே மனிதன் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டான்.
குறிஞ்சி நில "கடவுள்" முருகன் என நாம் அனைவரும் பள்ளியில் படித்திருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர் குறிஞ்சி நில "தலைவன்". மலைகளை ஏறுவதால் அந்த தலைவனின் உடல் "முறுக்கேறி" கட்டுக்கோப்பாக இருக்கும். தான் வளர்த்த கால்நடைகளை தன் தோளில் சுமந்து செல்வார். இதை தான் இன்று ஒரு கூட்டம் இந்து மதம், முருகன், பால்காவடி என கூறி நம்மை ஏமாற்றி தமிழினத்தை அடிமையாக வைத்துள்ளது.
காலங்கள் செல்கிறது, மக்கள் தொகை கூடுகிறது. இப்போது அந்த இனத்தை ஒரே போல் கொண்டு செல்ல ( Organized ) கண்ணுக்குத் தெரியாத ஒன்றை அவனை நம்ப வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போது தான் தங்கள் முன்னோரில் இறந்தவர்களை கடவுளாக நினைத்து வழிபட ஆரம்பித்தனர். தவறு செய்யாமல் தடுக்க இதன் மூலம் நினைத்தனர்.
இதுவே இப்போது குல தெய்வ வழிபாடாக உள்ளது. பின்னாளில் சட்டங்கள் வருவதற்கும் இதுவே அடிப்படை.
மக்கள் தொகை கூடியதால் மலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மனிதன் கீழே இறங்கி வருகிறான். காடாக இருக்கிறது. காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலம் என அழைக்கப்படும். இந்த முல்லை நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவன் தான் தமிழன்.
"பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒளிநீர்- கை அகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி"
இப்பாடலில் "கல்" என்பது மலையையும், "மண்" என்பது வயலையும் குறிக்கும். மலைகளில் வாழ்ந்த மக்கள் குழுவினர் மற்ற குழுக்களின் கால்நடைகளை கவர்ந்து வருவர். இது போன்ற காட்சிகளை அரவான் திரைப்படத்திலும் காணலாம். ஏனெனில் அப்போது அவர்களின் கால்கடைகளே மக்களின் சொத்து. திணைகளில் வெட்சித் திணை, கரந்தை திணை பற்றி படித்திருப்போம். இந்த இரண்டுமே படைப் பிரிவைப் பற்றியது. வெட்சி படை என்பது மற்ற குழுக்களின் கால் நடைகளை ( Offense ) கவரும் படை. கரந்தை படை என்பது தங்கள் கால்நாடைகளை கவராமல் ( Defense ) தடுக்கும் படை. அப்படையினர் வாளோடு போராடுவர். இதுவே
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி"
என்பதன் பொருள்.
காட்டில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மனித இனத்தின் தொகை இன்னும் அதிகமாகியது. அப்போது மனிதன் தனக்கான உணவை தானே தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஏனெனில் வேட்டையாடுவது அனைத்து நேரத்திலும் சாத்தியமில்லை. எனவே காட்டை சிறிது அழித்து வயலை உருவாக்குகிறான். விவசாயம் செய்ய காலப்போக்கில் கற்றுக் கொள்கிறான். வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் என அழைக்கப்படும். இந்த இடம் பெயர்தல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறுகிறது. அதுவும் அனைத்து மக்களும் இடம் பெயர வில்லை எனவும் நினைவில் கொள்ளுங்கள். கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் எனவும், பாலை நிலம் பாலை எனவும் அழைக்கப்பட்டது.
விவசாயம் செய்து சேகரித்து வைத்த உணவை மற்றொரு குழுவினர் கவர முயற்சித்தனர். அதை தடுக்கத் தானிய கிடங்கில் வீரர்கள் வாளோடும், வேளோடும் பாதுகாப்பிற்கு இருந்தனர். அவர்களுள் வலிமையானவன் "தலைவன்" ஆனான்.
பின்னாளில் "அரசன்" ஆனான். சாம்ராஜ்யங்கள் உருவாகின. ஒவ்வொரு காரணத்திற்காகவும் படையெடுப்புகள் நடந்தன.
என் தலைப்பு "இந்தியாவின் கதை" என்பதனால் இனி வரும் அத்தியாயங்கள் தில்லியை ( Delhi ) மையப்படுத்தியே இருக்கும். வாசகர்கள் ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்வை பற்றி கேட்டால் அதற்காக தனி பதிவும் பதிவிடுகிறேன். இப்போது தான் நான் கதை சொல்ல ஆரம்பிக்கவே போகிறேன். கடந்த காலத்தின் வரலாறு எதிர் வரும் காலத்தில் மூன்றாம் அத்தியாயம் மூலம் ஆரம்பிக்கும்.
Comments