இந்தியாவின் கதை: பாபர்
ஐரோப்பாவையும் ஆசியாவையும் நடுங்க வைத்த துருக்கிய மன்னன் தைமூரின் பரம்பரையும் மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் பரம்பரையும் இணைந்ததில் பிறந்தவர்தான் பாபர். பொதுவாக துருக்கியர்கள் நாகரீகத்தில் முன்னேறியவர்கள் கல்வியறிவும், புத்திசாலித்தனமும்,ராஜதந்திரமும் அமையப் பெற்றவர்கள். ஆனால் மங்கோலியர்கள் யாருக்கும் அஞ்சாத ஆவேசமான போர் வீரர்கள். இந்த இரு இனங்களின் ரத்தமும் கொண்டவர்தான் பாபர். அதனால் தான் அவரால் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சோதனை எல்லாம் கடந்து பிற்பாடு இந்தியாவில் ஒரு தீர்க்கமான சாம்ராஜ்யம் அமைத்து உலகப் புகழ் பெற முடிந்தது. கி.பி. 1483 இல் பர்கானா எனும் சிறு ராஜ்யத்தின் மன்னரான உமர் சேக்- க்கு மகனாகப் பிறந்தார். பாபருக்கு 11 வயது நடக்கும் பொழுது அவர் தந்தை இறந்துவிட்டதால் ஆட்சிப் பொறுப்பை பாபர் ஏற்றுக் கொண்டார். மாமன்னர் தைமூர் ஆண்டுவந்த நிலப்பரப்பு அவரது மறைவுக்...