இந்தியாவின் கதை- அத்தியாயம் 5 : டெல்லியும் இராஜபுத்திரர்களும்
டெல்லி....!! இந்தியாவின் நெற்றிப் பகுதியை வசீகரமாக அலங்கரிக்கும் இந்த மங்கலப் பொட்டை அழிக்கப் பார்த்த வேற்று நாட்டவர்கள் தான் எத்தனை பேர்? அதற்காக எத்தனை எத்தனை முயற்சிகள்??! உலக சரித்திரத்தில் எத்தனையோ நகரங்கள் சுவடு இல்லாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கிறது. ஆனால் டெல்லியின் கதை வேறு. எந்த சக்தியாலும் இந்த நகரத்தை வீழ்த்த முடியவில்லை, வரலாற்றுப் பக்கங்களில் இருந்தும் முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்பெற்று சிலிர்த்து எழுந்து நின்றது டெல்லி. ஆனால் கம்பீரமான இந்த மாநகரம் வரலாற்றுப் போக்கில் வாங்கிய கத்திக்குத்துகளும், தாங்கிய சோதனைகளும் நம்மை திகைக்க வைக்கின்றன. இந்தியாவில் புராதான கதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெல்லியின் கதையும் அதே புராதான கதைகளில் இருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பாகப்பிரிவினை செய்யும் பொழுது பாண்டவர்களுக்கு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த "காண்டவ பிரஸ்தம்" என்ற பொட்டல் காட்டைக் கொடுத்தார்கள். அதை அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் துணையோடு "இந்திரப்பிரஸ்தம்&quo