இந்தியாவின் கதை : அக்பர்
தான் செய்த அனைத்து தவறுகளையும் மாமன்னர் அக்பரை இந்த உலகிற்கு பெற்றுத் தந்ததன் காரணமாகச் சரி செய்துவிட்டார் ஹூமாயூன் என்றால், அது மிகையல்ல. இறந்த பிறகு மூன்று நாட்களுக்கு அந்த செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் இளவரசர் அக்பர் தொலைதூரத்தில் பஞ்சாப் பிரதேசத்தில் போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல் காரர்கள் ஆவதும், முதுகில் குத்துபவர்கள் எல்லாம் மாமன்னர்கள் ஆவதும் அக்காலத்தில் மிக சாதாரணமாக இருந்ததால் தனயனுக்குத் தகவல் சொல்லி தயார்படுத்தும் நிலைமை வரும் வரை இதை மிக ரகசியமாக வைத்தனர். ஹூமாயூன் போல தோற்றமளித்த ஒருவருக்கு அரச உடை அணிவித்து உப்பரிகையில் மங்கலான வெளிச்சத்தில் அமரவைத்து மக்களுக்கு கையசைக்க வைத்து மாமன்னர் ஹூமாயூன் உயிரோடு இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்தனர். ஷெர்ஷாவின் வழிவந்த சிக்கந்தர்ஷா ஹூமாயூனோடு போராடி தோற்ற பிறகு, பஞ்சாபில் தஞ்சம் புகுந்து மறுபடியும் படைதிரட்டி போருக்கு வந்ததால் இளவரசர் அக்பர் மற்றும் தளபதி பைராம் கான் ஆகியோரின் தலைமையில் படை