இந்தியாவின் கதை- அத்தியாயம் 1.மனித இனம்

                          நாம் அனைவரும் பள்ளியிலேயே, வரலாறு படிப்பதற்கு முன் அறிவியிலைப் படித்ததால், இன்றும் அறிவியலோடுத் தொடங்குவோம்.
1400 கோடி ஆண்டுகளுக்கு முன் - அண்டம் உருவாகிறது.
450 கோடி ஆண்டுகளுக்கு முன் - சூரியக்குடும்பம் உருவாகிறது. 
380 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஒரு செல் உயிரினம் உருவாகிறது. 
16 கோடி ஆண்டுகளுக்கு முன் - குட்டி போட்டு பாலூட்டும் இனம் உருவாகிறது. 
             இத்தனை ஆண்டுகளில்,  உலகம் அழிவையும் சந்தித்தே வந்தது. கடல்கள் மூலமாகவும், விண்கற்கள் விழுந்ததன் காரணமாகவும் தட்ப வெப்ப நிலை மாறியது. அதனால் சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்தது. அதில் டைனோசர்கள் முக்கியமானவை. ஆனால் அதே தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் வேறு சில உயிரினங்களில் மரபனு மாற்றம் ஏற்பட்டு வேறு சில உயிரினங்கள் தோன்றின. 
                              இன்று மனிதனின் மூதாதையர்கள் யார் என்றால், குரங்கு என்போம். ஆனால் உன்மை அதுவல்ல. 
                         Hominoidea என்ற உயிரினம் தான் அனைவருக்கும் மூத்தவர். மனிதனர்கள் "Homo" என்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். குரங்குகளில் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு குடும்பத்தைச் சார்ந்தது என படத்தில் தெளிவாக இருக்கிறது. ஆகையால் குரங்குகள் நமது அங்காளி, பங்காளி ( அண்ணன் -தம்பி )  முறையாக தான் வரும். Hominoidea தான் நம் உண்மையான தந்தை. இந்த உயிரினங்கள் வேறு வகை உயிரினங்களால் வேட்டையாட பட்டு அழிந்திருக்கலாம். அல்லது தன்னை ஒத்த இனத்தோடு புணர்ச்சி செய்து புதிய இனம் உருவாகி,  உண்மையான இனம் அழிந்திருக்கலாம், கழுதையும், குதிரையும் சேர்ந்து,  கோவேறி கழுதை இனம் உருவானது போல். எது, எப்படியோ, மனித இனம் உருவாகி விட்டது. 
                    இந்தியாவின் கதைக்கும், இந்த அறிவியில் கோட்பாடுக்கும் என்ன சம்பந்தம் என இங்கே கூறிக்கொண்டிருக்கிறாய் நீங்கள் நினைக்கிறீர்களா?? 
                   "காரண காரியமின்றி இங்கு எதுவும் நடப்பதில்லை" நண்பர்களே.. 
                    அப்படி தோன்றிய முதல் மனிதன் ஒரு தமிழன். இன்றைய அறிவியல் கோட்பாடு படி முதல் மனிதன், இன்றைய ஆப்ரிக்காவில் தோன்றினான். ஆம், அதுவும் உண்மையே. குமரிக்கண்டம், லெமோரியக் கண்டம் என்ற மாபெரும் நிலப்பரப்புகள் கடலுக்குள் சென்று விட்டது. 



இன்றைய ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா,இந்தியாவை இனைத்த மாபெரும் நிலம் அது. பல் வேறு காலக்கட்டங்களில் நடந்த கடல் சீற்றத்தால் கடலுக்குள் சென்று விட்டது. அதெப்டி என நக்கலாக நினைக்க சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல ரொம்ப தூரம் செல்ல தேவையில்லை. 1968 ஆம் ஆண்டு தனுஷ் கோடியில் நடந்ததை நினைத்தால் இது புரியும். மேலும், இதை விளக்கமாக சொல்ல வேண்டுமானால், சொல்லலாம். இந்த உலகின் இது வரை கண்டறியப்பட்ட மிக ஆழமான இடம், பசிபிக் பெருங்கடலில் உள்ளது. அதன் ஆழம்,  சுமார் 11 கிலோ மீட்டர் தான். இந்தியப் பெருங்கடலின் சராசரி ஆழம் 3.9 கிலோ மீட்டர்கள் மட்டுமே.  அதுவும்
கன்னியாகுமரி சுற்றியுள்ள பகுதியில் ஆழம் வெறும் 2 கிலோ மீட்டர்கள் தான். ஆனால் கடலுக்கடியில் வெறும் 2 கிலோ மீட்டர் ஆழம் செல்ல முடியாமல் நம் அறிவியல் தொழில் நுட்பம் தவிக்கிறது.
4500 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தை விட, 7000 ஆண்டுகள் பழமையான  துவாரகை நாகரிகமே பழமையானது என நிரூபிக்க ஒரு சதி நடந்து கொண்டே இருக்கிறது. அதனால், 11,000 ஆண்டுகள் பழமையான பூம்புகார் அகழ்வராய்ச்சி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி,  கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் முறையாக இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதன் பின்னால் வேரொறு சதி, அரசியல் இருக்கிறது.
                     குமரிக்கண்டத்திற்கு பிறகு, இன்றைய இந்திய நிலத்தின் தொன்மையாக கூறப்படுவது, "கல் தோன்றி, மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி" என்ற வார்த்தை. அதன் பொருள், உலகம் உருவாகிய போதே தமிழர்கள் தோன்றினர் என ஒரு சிலர் நினைப்பதுண்டு. அதன் உண்மை பொருளை காண்போம்.

"பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒளிநீர்- கை அகலக்
கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே,
வாளோடு முன்தோன்றி மூத்த குடி"
                   
இதில் "கல்" என்ற வார்த்தை "மலை" யை குறிக்கும்.  "மண்" என்ற வார்த்தை "வயலை" குறிக்கும்.

                         தற்போது இதை வைத்து யோசித்துக் கொண்டே இருங்கள். மலைக்கும், வயலுக்கும் என்ன உறவு என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். உங்கள் கருத்துகளும்,  விமர்சனங்களும் வரவேற்க்கப்படுகின்றன.

           

Comments

Unknown said…
Super anna, 🤩🔥
Vijaya Raghavan said…
அருமையான தொடக்கம்
Unknown said…
Machan Sema Da
Karpaga Dhanah said…
Topic is good. But so many spelling mistakes are interupt to read your essay.And I expect the evidence or footnotes about your thoughts especially dhuvaraga civilization,tamil quote .And I also want to see the picture of father of man.
Ashok Kumar said…
தவறுகளை திருத்திக் கொள்கிறேன். துவாரகை நாகரிகமே பழமையானது என நிரூபிக்க சதி நடக்கிறது, ஆனால் இன்னும் நிரூபிக்க வில்லை. அதுவரை அதுபற்றிய அதிகார பூர்வமாக செய்தி இல்லை. Hominoidea வாழ்ந்த காலத்தில் கேமரா இல்லாத காரணத்தால், நீங்கள் அவரை பார்க்க முடியாது. Google இல் இருக்கும் அனைத்தும் ஒரு யூகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படங்களே. இறுதியாக, அந்த பாடல் "புறப்பொருள் வெண்பா மாலை" என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த நூல். ஆய்வாளர்கள், ஆய்வை நிரூபிக்கவே Footnote ஆதாரங்கள் தேவை. வரலாற்றை தமிழ் இலக்கியத்தோடு சொல்லும் எனக்கு ஆதாரங்கள் தேவையற்றவையாகவே கருதுகிறேன். நன்றி

Popular posts from this blog

Ways to reduce my Tax

Benefits of Income Tax Return Filing

UDYAM - Whether a boon or bane for MSMEs