இந்தியாவின் கதை : ஔரங்கசீப்
ஆக்ரா கோட்டையை வசப்படுத்தி தன் தந்தையை சிறைப்படுத்தி அரியணையில் அமர்ந்தார் ஔரங்கசீப். தனது வேண்டாத மகன் தற்போது வெற்றி வீரனாக மாறியதை தந்தையின் கண்ணில் பார்க்க ஆசை பட்டார் ஔரங்கசீப். ஆனால் பழைய பாதுஷா ஷாஜகானுக்கு தற்போதும் சில இராஜ விசுவாசிகள் இருப்பதாகவும், தந்தையை சந்திக்கச் சென்றால் தங்களை கொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாகவும் உளவு செய்தி வந்தது. அதனால் தன் தந்தையை சந்திக்கும் முடிவை தற்போதைக்கு தள்ளி வைத்தார். ஜோதிடர்கள் நல்ல நாள், நேரம் பார்த்து சொல்ல, ஜூலை 21, 1658 - இல் டெல்லி செங்கோட்டையில் பரந்து விரிந்த தோட்டத்தில் எளிமையான முறையில் "ஆலம்கீர்" என்ற பட்டத்துடன் முடி சூட்டிக்கொண்டார். விருந்து, கொண்டாட்டம், வான வேடிக்கை என நேரத்தை வீனடிக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று களத்தில் இறங்கினார். அதுதான் ஔரங்கசீப். தன் அண்ணன்கள் மீது பார...