இந்தியாவின் கதை- அத்தியாயம் 1.மனித இனம்
நாம் அனைவரும் பள்ளியிலேயே, வரலாறு படிப்பதற்கு முன் அறிவியிலைப் படித்ததால், இன்றும் அறிவியலோடுத் தொடங்குவோம். 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் - அண்டம் உருவாகிறது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் - சூரியக்குடும்பம் உருவாகிறது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஒரு செல் உயிரினம் உருவாகிறது. 16 கோடி ஆண்டுகளுக்கு முன் - குட்டி போட்டு பாலூட்டும் இனம் உருவாகிறது. இத்தனை ஆண்டுகளில், உலகம் அழிவையும் சந்தித்தே வந்தது. கடல்கள் மூலமாகவும், விண்கற்கள் விழுந்ததன் காரணமாகவும் தட்ப வெப்ப நிலை மாறியது. அதனால் சில உயிரினங்கள் முற்றிலும் அழிந்தது. அதில் டைனோசர்கள் முக்கியமானவை. ஆனால் அதே தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் வேறு சில உயிரினங்களில் மரபனு மாற்றம் ஏற்பட்டு வேறு சில உயிரினங்கள் தோன்றின. இன்று மனிதனின் மூதாதையர்கள் யார் என்றால், குரங்கு என்போம். ஆனால் உன்மை அதுவல்ல. Hominoidea என்ற உயிரினம் தான் அனைவருக்கும் மூத்தவர். மனிதனர்கள் "Homo" என்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். குரங்குகளில் ஒவ்வ